15025 மட்டக்களப்பின் தொன்மையும் தொடர்பாடலும்: தமிழை மையப்படுத்திய ஒரு வரலாற்று நோக்கு.

ஸ்ரனிஸ்லாஸ் மோசேஸ். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 2020. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

ஏழாவது அனாமிகா நினைவுப் பேருரையாக 26.12.2020 அன்று நிகழ்த்தப்பட்ட உரையின் நூல்வடிவம். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளர் கலாநிதி மோசஸ் அவர்களின் மட்டக்களப்பின் தொன்மையும் தொடர்பாடலும்: தமிழை மையப்படுத்திய ஒரு வரலாற்று நோக்கு என்ற தலைப்பில் ஆற்றப்பட்டிருந்தது. மட்டக்களப்பின் வரலாற்றுத் தொன்மையைப் பற்றிய ஒரு குறிப்பு, தொன்மைத் தமிழுக்கு மட்டக்களப்பு வழங்கியுள்ள பங்களிப்பு, மட்டக்களப்பின் தொடர்பாடலைப் பற்றிய விளக்கம், மட்டக்களப்பில் தகவல் தொடர்பாடல், மட்டக்களப்பில் தகவல் தொடர்பு சாதனங்கள், முடிவுரை ஆகிய உபதலைப்புகளில் இப்பேருரை நூல்வடிவம் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12809 – பரதேசம் போனவர்கள்.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்). 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 12.5 சமீ., ISBN: 978-955-7295-01-5. நூலின்

15961 ஜீவநதி: தெணியான் பவளவிழாச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (இதழாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: