15058 இளைஞர்களுக்கான ஆன்மிகச் சிந்தனைகள்.

சத்தியவதி இராஜேந்திரம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 166 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-088-13-0.

சாதாரண மனிதனின் சிற்றறிவுக்கு எளிதில் விளங்காத ஆழ்ந்த சமயக் கருத்துக்களை, சிறுகதைகள், உதாரணங்கள் வாயிலாக விளங்கவைக்கும் முறையானது ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை வேத, புராண, இதிகாச நூல்களிலும் பிற சைவ நூல்களிலும் காணலாம். உலகில் தோன்றிய அனைத்து அவதாரப் புருஷர்களும், இறைதூதர்களும் கூட இந்தக் கதை கூறும் மரபைக் கையாண்டு தங்கள் அறவுரைகளைப் பாமரரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறியுள்ளனர்.  சமீப காலத்தில் தோன்றிய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், அவரது பிரதம சீடர் சுவாமி விவேகானந்தரும் கூட இதே வழியில் பல உன்னத கருத்துக்களை எளிதில் புரியவைத்துள்ளனர். அந்தப் பாணியில் வெளியிடப்படும் இந்நூலில், புத்தர், இராமலிங்க அடிகள், ஒளவையார் போன்ற ஞானியரின் வாழ்க்கை வரலாற்றோடு, பல அறநெறிக் கதைகளும், தத்துவ விளக்கங்களும் சுவைபட எடுத்துக் கூறப்பட்டுள்ளன. நூலாசிரியை திருமதி இராஜேந்திரம் அவர்கள் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இரத்மலானை இந்துக் கல்லூரியில் இயங்கிவரும் அறநெறிப் பாடசாலைகளில் தொண்டராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Higher Earnings to possess 2024

Posts Casino Wizbet mobile – What’s a payout percentage? Greatest payment online casino by the category Can i Determine RTP to have a familiar Pro?