15061 ஒளவையார் அருளிச்செய்த கொன்றைவேந்தன்.

ஒளவையார் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

viii, 24 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-84-8.

நற்பண்புகளுடன் கூடிய நல்லொழுக்கம் இறை அனுபவத்துக்கு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியது தமிழர் மதம். இதன் காரணமாகத் தோன்றிய அற நீதி நூல்களில் சிறுவர் முதற் பெரியோர் வரை மறவாது போற்றும் நூல் கொன்றைவேந்தன் என்றால் மிகையில்லை. நீதிநெறி  வழுவாது வாழ்வதற்காக அரிய நூல்களை உரைகளுடன் அச்சேற்றி வெளியிட்டவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். நீதி நெறி சீராகப் பேணப்படாவிட்டால் சமூகம் சீரழிந்துவிடும் என்பதனை நன்குணர்ந்த அவர் எதிர்காலத்திலே எமது குழந்தைகள் மனனஞ் செய்வதற்கேற்ற முறையிற் 19ஆம் நூற்றாண்டிலேயே உயர்ந்த மனிதநேயக் கருத்துக்களை இந்த நீதிநூல்களின் வாயிலாகத் தொகுத்து வெளியிட்டார்கள்.

ஏனைய பதிவுகள்