15065 திருக்குறள் அமுதம்.

க.செல்வரத்னம். கொழும்பு 6: கந்தையா செல்வரத்னம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×16 சமீ.

லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் “கலசம்” சஞ்சிகையின் வாயிலாக அறிமுகமானவர் கந்தையா செல்வரத்னம். திருக்குறள் அமுதம் நூல் சிறியது. ஆசிரியர் 1330 குறள்களுக்குள் சிலவற்றை தெரிவுசெய்து தமிழுக்கு ஓர் அழகிய அணிகலமாகத் தந்துள்ளார். அவருடைய வாழ்க்கை அனுபவத்தையும் பிறர்மீது அவருக்குள்ள அன்மையும் எடுத்துக்காட்டும் எழுத்துக்களாகவும் இது அமைகின்றது. அனுபவ உண்மைகள் விலை உயர்ந்தவை.  எழுத்தாளராகவும் ஆசிரியராகவும், குடும்பத் தலைவராகவும் மற்றும் பலகோணங்களில் தான் கண்டு உணர்ந்தவற்றின் சில உண்மைகளை எங்களுக்காக தெரிவுசெய்து நுணுக்கமாகப் படைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

15273 யாழ்/அத்தியார் இந்துக் கல்லூரி-நீர்வேலி : 75வது ஆண்டு நிறைவு பவளவிழாமலர் 2004.

இதழாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: ஜய்ராம் பிறின்டேர்ஸ், 351, மணிக்கூண்டு வீதி, வெலிங்டன் கடைச் சந்தி). xxxv, 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

11512 குண்டுமீனும் குட்டிமீனும்.

ஹேமலதா கனகலிங்கம் (கதை), ஆர்.சுரேந்திரன்; (சித்திரங்கள்). இலங்கை: ரூம் டு ரீட் திட்டம், இல. 38, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, கொழும்பு 6, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி