15068 நன்னெறிக் கட்டுரைகள்.

இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு. கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

ix, 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-624-5015-05-4.

இந்து சமய அறநெறிக் கல்வியின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக வெளியிடப்படும் பாடத்துணை நூல். ஆறுமுக நாவலரின் ”பாலபாட” நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பெற்று தனி நுலாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் நன்மாணாக்கன், நித்திரை, நித்திய கருமம், பெரியோரை வழிபடல், துர்வார்த்தை, உயிர்களுக்கு இதஞ்செய்தல், பெற்றோரைப் பேணல், கல்வி, செல்வம், கேள்வி, முயற்சி, காலம், பரிகாசம், புறங்கூறல், வித்தியாசாலை, புத்தகம், சிநேகம், ஈகை, சரீர சௌக்கியம், அருள், கள்ளுண்ணல், களவு, பொய், அழுக்காறு, கோபம், செய்ந்நன்றி அறிதல், பெரியோரைப் பேணல், தானம், கல்வி, செல்வம், தருமம், கடன்படல், நல்லொழுக்கம், ஆரோக்கியம் ஆகிய 34 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மேலும் பின்னிணைப்புகளாக கடவுள், ஆன்மா, கடவுள் வழிபாடு, ஈசுரத் துரோகம், கொலை, புலாலுண்ணல், சூது, பசுக் காத்தல், தேவாலயம், தேவாலய தரிசனம், புராண படனம், சகோதர சகோதரிகள், கடவுளுதவி, யாக்கை நிலையாமை, மழை, தாவரம், வீடு, நாவலர் வாழ்க்கையிற் சில சம்பவங்கள் ஆகிய 18 கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Wagering Requirements Guide

Content Play Slots With A 100percent Deposit Bonus Welcome Bonus Up To 500 How To Choose The Lowest Deposit Casino For Your Budget Match Deposit