மே.வீ.வேணுகோபாலபிள்ளை (பதிப்பாசிரியர்). சென்னை: ம.ரா.அப்பாதுரை, வேப்பேரி போஸ்டு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
விவேக சிந்தாமணி என்பது ஒரு பழைமையான தமிழ் நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும். இந்த நூல் தொகுப்பில் 135 பாடல்கள் உள்ளன. இந்த நூலின் ஆசிரியர் யார் என்பதோ எக்காலத்தில் இயற்றப்பட்டதென்பதோ அறியப்படவில்லை. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று சில ஆய்வாளர் கூறுகின்றனர். இந்நூலில் சிந்தனைக்குகந்த, பொருள் பொதிந்த வார்த்தைகளால் நீதிகளும், அழகியலும் செய்யுள் நடையில் சொல்லப்பட்டு இருக்கும். தனிப்பாடல்களாக இருந்த பாடல்களைத் தொகுத்து இந்த நூல் உருவானது என்ற அனுமானமும் உண்டு. உதாரணம்: “ஆபத்துக் குதவாப் பிள்ளை/ அரும்பசிக் குதவா அன்னம்/ தாபத்தைத் தீராத் தண்ணீர்/ தரித்திரம் அறியாப் பெண்டிர்/கோபத்தை அடக்கா வேந்தன்/ குருமொழி கொள்ளாச் சீடன்/ பாபத்தைத் தீராத் தீர்த்தம்/”பயனில்லை யேழுந் தாமே” (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 00388).