15072 அருணந்தி சிவாசாரியார் அருளிய இருபா இருபஃது (பொருளுரையும் விரிவுரையும்).

ஆ.பொன்னையா. சென்னை 600018: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி.டி.கே. சாலை, ஆள்வார்பேட்டை, 1வது பதிப்பு, 2003. (சென்னை 41: கீதா கம்பியூட்டர்ஸ்).

xvi, 272 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 22×14 சமீ.

சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபஃது 20 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலாகும். அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய இந் நூல், அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது. இருபா இருபஃது  நூலின் ஆசிரியரின் கூற்றுக்களின் காரணமும் அடிப்படையும் இந்நூலில் உரையாசிரியரால் விளக்கப்பட்டு உரை செய்யப்பட்டுள்ளது. மெய்கண்டாரின் சிவஞானபோதக் கருத்துக்கள் அடிப்படையாக அமைந்தள்ளன என்பதைப் பல இடங்களில் விளக்கி பொருத்தமான சிவஞானபோதத் தொடர்புகளையும் நூலாசிரியர் காட்டி விரிவுரை செய்திருப்பது சிறப்பானதாகவுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28177).

ஏனைய பதிவுகள்