15076 சித்தாந்த மாணவனின் சிவஞானபோத சாரம்.

சித்தாந்த மாணவன் பொ.இரத்தினம் (மூலம்), சி.ரமணராஜா (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: சைவசித்தாந்த ஆய்வு நிறுவனம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, ஜீலை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 32/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xxii, 113 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-44529-2-3.

மெய்கண்டதேவரின் ‘சிவஞானபோதம்” சைவத் தமிழுக்குக் கிடைத்த ஒரு தத்துவஞானக் கருவூலமாகும். கி.பி.13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டதேவர் அருளியதே சிவஞானபோதமாகும். அதன் சாரத்தை விளக்கும் “சிவஞானபோத சாரம்” என்ற இந்நூல் சித்தாந்த மாணவன் என்ற புனைபெயரில் வட்டுக்கோட்டை பொ.இரத்தினம் அவர்களால் எழுதப்பட்டு 1957இல் யாழ்ப்பாணம் விவேகானந்த அச்சகத்தில் அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டது. சிவஞானபோதத்திற்கான எளிமைப்படுத்தப்பட்ட முயற்சிகளில் குறிப்பிடத்தக்க நூல் இதுவாகும். பொதுவியல்பு, சிறப்பியல்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுதப்பட்ட இந்நூலின் பொதுவியல்பில் பிரமாணவியல் (முதல் 3 சூத்திரங்கள்), இலக்கணவியல் (நான்காம், ஐந்தாம், ஆறாஞ் சூத்திரங்கள்) ஆகியனவும் சிறப்பியல்பில் சாதனவியல் (ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சூத்திரங்கள்) பயனியல் (பத்தாம், பதினொராம், பன்னிரண்டாம் சூத்திரங்கள்) என்பனவும் விளக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Gratorama 7 Eur voor ronken

Inhoud De Baywatch gokkast – Spelen appreciren het Winorama app Gevechtsklaar optreden waarderen Gratorama Een je beschrijft pastoor was jij als christen bestaan, testen gij

16808 மண் அளக்கும் சொல்.

ஆசி. கந்தராஜா. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜீலை 2022. (சென்னை 600018: Clicto Print, Jaleel Towers, 42 KB Dason Road, Teynampet). 184 பக்கம்,