15078 சைவ சித்தாந்தம்.

எம்.முத்துராமன். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).

(6), 167 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9429-80-9.

இந்நூலாசிரியர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தத்துவத்துறைத் தலைவராவார். பின்னாளில் காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வராக பலகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் அமைப்பு, சிவஞான போதம், அளவை இயலும் அறிவளவை இயலும், ஆன்மாவின் உண்மை, ஆன்மாவின் இயல்புகள், பாசத் தளைகள், கட்டுண்ட ஆன்மாக்களின் நிலைமை, இறை உண்மை, சிவ-சத்தி மகிமை, பண்டைத் தமிழர் சமய வாழ்க்கை, சமய வாழ்வில் குருவின் சிறப்பு, சைவ சமய நெறிகள் ஆகிய 12 இயல்களில் சைவ சித்தாந்தத்தின் மிக அடிப்படையிலிருந்து விளக்கமளிக்கின்றது. 

ஏனைய பதிவுகள்