15083 இயேசு கீதை.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஆடி 2005. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

112 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இயேசு கிறீஸ்து பெருமான் பழைய திருட்டாந்தங்களுக்குப் பதிலாகப் புதுத் திருட்டாந்தங்களை தந்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் உபதேசங்களும் இறை சத்தியங்களும் தொகுக்கப்பட்டு வெண்பாச் செய்யுள் வடிவத்தில் இந்த ”இயேசு கீதை” படைக்கப்பட்டுள்ளது. இயேசு கீதைப் படைப்பின் நோக்கம், பகுதிப் பகுப்பு -1 (இறை யோகப் பொருள் அகரவரிசை, இறையோகச் செய்யுள் அகரவரிசை, முதலாவது இறையோகம்), பகுதிப் பகுப்பு -2 (கறையோகப் பொருள் அகரவரிசை, கறையோகச் செய்யுள் அகரவரிசை, இரண்டாவது கறையோகம்), பகுதிப் பகுப்பு -3 (மறையோகப்பொருள் அகரவரிசை, மறையோகச் செய்யுள் அகரவரிசை, உள்ளுரை, மூன்றாவது மறையோகம்) ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயேசு அருளிய சத்திய வசனங்களை அவ்வாறே செய்யுள்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்காக வெண்பா யாப்பு ஒழுங்கிலிருந்து இடைக்கிடையே அசை பிசகியும், சீர்கள் சீரற்றுந் தளை தளர்ந்தும் போனது தவிர்க்கமுடியாத காரியம் என்பதை படைப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனினும் செய்யுள்கள் யாவும் வெண்பாவிற்கே உரிய இசையமைப்பில் ஆதிதாளத்திலும் சங்கராபரணத்திலும் பாடி மகிழும் இசையாப்பு உள்ளவையாகக் காணப்படுகின்றன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3703). 

ஏனைய பதிவுகள்

16236 இலங்கை அரசியல் திட்ட வரலாறு.

கருப்பையா பிரபாகரன். கண்டி: ஈஸ்வரன் புத்தகாலயம், 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2013. (கண்டி: குறிஞ்சி பதிப்பகம், 280 A, நேத்ரா ஓப்செட் பிரின்டர்ஸ், டீ.எஸ். சேனநாயக்க வீதி). xii, 308 பக்கம்,