15084 சஞ்சீவி (கட்டுரைகள்).

எஸ்.ஏ.ஐ.மத்தியூ. மருதமுனை: முபா பிரின்ட் இமேஜ், 1வது பதிப்பு, ஜீன் 2010. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

(8), 114 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 21×14 சமீ.

இருக்கின்ற இறைவன் சஞ்சீவி. அபூர்வமான மருந்துகளுக்குப் பெயரும் சஞ்சீவி தான். இந்த நூலில் இறைவனுடைய வார்த்தைகள் தற்கால சூழ்நிலைகளுக்கேற்ப  எளிமையாக விபரிக்கப்படுகின்றன. 1965 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை வானொலி தேசிய சேவையில் பல நூற்றுக்கணக்கான சிந்தனைத் துளிகளை வெளியிட்டு வந்த நூலாசிரியர் இந்நூலில் அவற்றினை கடவுள் நம்மிலே மகிழ்ச்சி கொள்கிறார், மன்னிப்பு, புதிய ஆண்டு, உயர்குடி மகன் இயேசு, யேசுவின் சாம்ராஜ்ஜியம், கடவுளில் நம்பிக்கை கொள்வோம் என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்ட 43 கட்டுரைகளின் வடிவில் வழங்கியுள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4127). 

ஏனைய பதிவுகள்

17172 கடல்: கல்வியியல் உளவியல் சமூகவியல் ஏடு (முதல் 18 இதழ்களின் தொகுப்பு).

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 632 பக்கம்,