15089 வெசக் சிரிசர 2011.

நெவில் பியதிகம (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே 2011. (கொழும்பு-01: ANCL, Commercial Printing Department).

iv, 165, (2), iv, 14, iv, 114  பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 76ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக வாழ்த்துச் செய்தி (அதி மேதகு சனாதிபதி)யும், பௌத்த வழிபாட்டில் போதி மரம் (த.கனகரத்தினம்), வாழ்நாளில் சாந்தி பெற புத்த போதம் (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), சப்பாஸவ சுத்தம் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50045).

மேலும் பார்க்க: பௌத்தமும் கிறிஸ்தவமும்: 15080

ஏனைய பதிவுகள்