15092 இந்து மதத்தின் இன்றைய தேவைகள்.

ஆரையம்பதி க. சபாரெத்தினம். ஆரையம்பதி-2: க. சபாரெத்தினம், 177 A, 6ஆம் குறுக்குத் தெரு, செல்வா நகர், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (மட்டக்களப்பு: ஜெஸ்லியா அச்சகம், பிரதான வீதி, ஆரையம்பதி).

vii, 70 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-53426-3-6.

காலத்தையும் நியதிகளையும் கருத்திற் கொண்டு இந்து மத தத்துவங்களின் மேலான சிறப்பினையும் அவற்றில் பொதிந்து கிடக்கும் மெய்ப்பொருள் உண்மைகளையும் காரண காரியங்களின் அடிப்படையில்அறிவுபூர்வமாகச் சிந்தித்து அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்யுமோர் உபாயமாக இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். இந்து மதம் பற்றிய அறிமுகம், இந்து சமூகத்தின் இன்றைய நிலை, ஆற்றவேண்டிய முக்கிய பணிகள், மெய்யியல் விளக்கங்கள், முடிவுரை ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூலை எழுதியுள்ளார். ஆசார சீலம், மதப்பிரசாரகர்கள், மதமாற்றம், நூல்களின் சிக்கல் தன்மை, சாதிப் பிரிவினை ஆகிய பல சமூக நிலைமைகளை இந்நூலின் பேசுபொருளாக்கியுள்ளார். ஆரையம்பதி க. சபாரெத்தினம், 1946இல் பிறந்தவர். 1968ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் இலங்கையின் கல்வித் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஆகியவற்றில் எழுதுவினைஞர் சேவையில் பணியாற்றியவர். மொஸ்கோ (ரஷ்யா), பெய்ரூட் (லெபனான்) ஆகிய நகரங்களில் தூதரக அதிகாரியாகவும் எட்டுஆண்டுகள் பணியாற்றியவர். 2005 செப்டெம்பரில் பணி ஓய்வு பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

The Role of Corporate Software

In the past, a majority of businesses conducted their operations by hand. This often led to mistakes and delays. Software tools have transformed the traditional

Internet principal site casino Bonus

Posts Casino Step Evaluation Gambling establishment Greeting Bonuses Evaluation Prolonged Kyc Confirmation Blocks Player’s Withdrawal Classic Pokies Inside Local casino Step Your claimed’t must beat