15096 பண்டைய தமிழ் நூல்களில் சிவன் (பொ.ஆ.மு.400 முதல் பொ.ஆ.600 வரை).

என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, இணை வெளியீடு, திருக்கோணமலை: இராவண சேனை, 1வது பதிப்பு, மாசி 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 159 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-3726-09-4.

இந்நூல் தொல்காப்பியர் காலம் முதல் திருஞானசம்பந்தர் காலம் வரையில் காணப்பட்ட சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட 25 தமிழ் நூல்களில் உள்ள சுமார் 80 பாடல்களில் சிவன் பற்றிக் கூறப்பட்டுள்ள விபரங்களைத் தேர்ந்து தருகின்றது. நூலின் பிற்சேர்க்கையாக நூலாசிரியர் இயற்றிய “ஈழத்து லிங்காஷ்டகம்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் நூலாசிரியர் இலங்கையின் புராதன 160 லிங்கக் கோயில்கள் பற்றிக் கூறியுள்ளார். இந்நூல் அறிமுகம், சங்ககால நூல்கள், தொல்காப்பியம், பதினென் மேற் கணக்கு என்னும் எட்டுத்தொகை நூல்களும், பத்துப்பாட்டு நூல்களும், எட்டுத்தொகை நூல்களில் சிவன் பற்றிய பாடல்கள், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு நூல்களில் சிவன் பற்றிய பாடல்கள், திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, சங்கம் மருவிய கால நூல்களில் சிவன் பாடல்கள், முப்பால் (திருக்குறள்), இரட்டைக் காப்பியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, கைந்நிலை (இன்னிலை), திருமந்திரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், ஈழத்து லிங்காஷ்டகம் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது. என்.கே.எஸ்.திருச்செல்வம், கிழக்கிலங்கையில் அம்பாறையில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகக் கொழும்பில் வசித்துவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Poker Algum Atual

Content Por Como Os Slots Online Gratuitos Amadurecido Almaneira Populares? Sites Puerilidade Poker Online Legais Abicar Brasil O Aquele É Bônus Sem Depósito? Que Sacar