க.குணராசா. யாழ்ப்பாணம்: ஆலய அறங்காவலர் சபை, எச்சாட்டி மஹாமாரி அம்மன் ஆலயம், வண்ணார் பண்ணை கிழக்கு, கலட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
(12), 63 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×22 சமீ.
மழை காலத்தில் எள் பயிரிடப்படும் அந்த மேட்டுநில வயல்வெளி அறுவடை முடிந்ததும் பெரும்பான்மையான வேளைகளில் வரண்டு வெங்கணாந்தி வெளியாகக் காணப்படும். “சாட்டி” என்பது அறுவடையின் பின்னர் வரண்டு கிடக்கும் வயல் நிலத்தைக் குறிப்பது. எள்+சாட்டி என்பது மருவி எச்சாட்டி என்றாயிற்றென இடப்பெயர் விளக்கம் தரும் செங்கை ஆழியான், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கில், கலட்டியில் அமைந்துள்ள எச்சாட்டி மகாமாரி அம்மன் கோவிலின் வரலாற்றை இலக்கியச் சுவையுடன் முதல் நான்கு இயல்களிலும் விரிவாக புகைப்பட ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார். ஐந்தாம் இயலில் ஆலய அபிவிருத்தியில் பங்குகொண்டோர் பற்றிய வரலாற்று விபரங்களை அவர்களது புகைப்படங்கள் சகிதம் பதிவுசெய்திருக்கிறார். ஆறாவது இயலில் 1993இன் பின்னைய புதிய நிர்வாகத்தின்கீழ் ஆலய நடவடிக்கைகள் பற்றி விபரித்துள்ளார். தொடர்ந்து வரும் ஏழாவது இயலில் 1927முதல் இன்றுவரை நடைபெற்ற கும்பாபிஷேகங்கள் பற்றியும், எட்டாவது இயலில் ஆலய உற்சவங்கள் பற்றியும் விபரித்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17980).