15113 நல்லைக்குமரன் மலர் 2021.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை).

(8), xvii, 82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 29ஆவது மலராக 2021 நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் அவனருள் வழிசெய்யும் (த.ஜெயசீலன்), நல்லூரில் குடியமர்ந்த வேல்முருகன் (சின்னப்பு தனபாலசிங்கம்), நல்லையூரான் பாதம் நாடிடு மனமே (தங்கராசா தமயந்தி), வந்தருளைத் தந்திடுவான் வடிவேலன் (கீழ்க்கரவை கி.குலசேகரன்), நல்லுரின் நாயகனே (இராசையா சிறிதரன்),  நல்லை நாயகனை நாடிடுவோம் (சுகிர் நாகேந்திரா), நல்லையம்பதியின் நாயகன் (ஸ்ரீமதி சுபாஷினி), இந்தாண்டு வரம் மறுத்தாய் ஏன்? (எஸ்.பத்மகுமார்), யாழ்ப்பாணத்து முருகத் திருத்தலங்கள் மீது பாடப்பெற்ற சில பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள் (சண்முகலிங்கம் சஜீலன்), பிரமக் குயவன் வனைவதற்கு ஏது? (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), சாதாரண மக்களுக்கான அரங்கத் தேவையும் சூரன்போர் சடங்கும் (நிருஜா இராசரத்தினம்), இந்து சமயத்தில் மனித உரிமைகள் (பா.பிரசாந்தனன்), தேவார திருவாசகங்களினூடாக தெளிவுபடுத்தப்படும் சைவசித்தாந்த முப்பொருள் கோட்பாடு (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), இந்து மெய்யியலில் அளவையியல் அறிமுகம் (ஆறுமுகம் சசிநாத்), பஞ்ச ஈஸ்வரங்கள் பற்றி ஒரு பார்வை (ஆரணி விஜயகுமார்), அலகிலா ஆடல்புரியும் அம்பலத்தரசனின் ஆலயம்-தில்லைச் சிற்றம்பலம் (தி.மனோஷன்), திருமந்திரமும் திருக்குறளும் (ஆ.வடிவேலு), திருமந்திரம் சொல்லும் வாழ்வியல் (தேசிங்குராஜன் சாய்கித்தியன்), சாம்பவீ தீட்சையினை நல்கும் மஹோத்சவம் பற்றி ஒரு நோக்கு (மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா), 2021இல் யாழ் விருதினைப் பெறும் வாழ்வக நிறுவனத்தின் தலைவர் அ.இரவீந்திரன் அவர்கள் (ப.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Slot

Content $ 5 Einzahlung Casino Dracula Slot – Dies Man sagt, sie seien Diese Besten Casinos Um Book Of Ra Deluxe Für jedes Geld Dahinter

Как возникало «Русское игра»

Content Счастливы вне меня? Беру поздравления! В случае чего, за облаками вдобавок есть чего выиграть. Всем фортуны! А как бацать во Российское лото Бинго-75: оригинальности