15115 ஆகம கிரியா சூடாமணி: மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2020.

கி.சோமசுந்தரக் குருக்கள். சாவகச்சேரி: சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள், நெல்லியடிப் பிள்ளையார் ஆலயம், மானாவளை, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மாசி 2020. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xii, 208 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ.

இந்நூலாசிரியர் பிரதிஷ்டா வித்தகர், சிவாகமஞான சாகரம் சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள், சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் பாண்டித்யம் பெற்ற மூத்த சிவாச்சாரியாராவார். “ஆகமக் கிரியைகள்” தொடங்கி, “வைதீகக் கிரியைகள்” என்ற அந்தணர் சடங்குகள் வரை இந்நூலில் அடக்கியிருப்பது அவரின் இருமொழிப் புலமைக்கு ஓர் சான்றாகும். இரண்டு பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இம்மகா கும்பாபிஷேக மலரில், மட்டுவில் வடக்கு, மானாவளைப் பகுதியில் கோயில் கொண்டிருக்கும் நெல்லியடிப் பிள்ளையார் ஆலய வரலாறும் கும்பாபிஷேக நிகழ்வுகளும் பற்றிய ஆக்கங்கள் மற்றும் அறிக்கைகள் முதலாம் பிரிவிலும், இந்து மத வழிபாடும், கிரியைகள் பற்றிய விபரங்களும், அவற்றிற்கான விளக்கங்களும் இரண்டாவது பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. மூன்று பாகங்களைக் கொண்ட இரண்டாம் பிரிவு விரிவானது. அதில் முதலாம் பாகம் ஆலய வழிபாட்டு முறைகள் (சரியை, கிரியை பற்றிய விளக்கங்கள்) பற்றிக் கூறுகின்றது. இரண்டாம் பாகம் ஆலயக் கிரியைமுறைகளும் விளக்கங்களும் பற்றிக் கூறுகின்றது. மூன்றாம் பாகத்தில் வைதீகக் கிரியை முறைகளும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் பிராமணர்களுக்குரிய வைதிகக் கிரியைகளும் ஆகம விவாஹக் கிரியைகளும் இரண்டு பிரிவுகளாகத் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Top Data Room Review

A virtual dataroom is a solution for sharing files that enables several users to work on the same document. It is also a way to