15123 சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

iv, 60 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9233-95-4.

பேரருள் பெற்ற நாயன்மார்கள் அறுபத்து மூவர்தம் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்திலே அழகுறப் பாடியுள்ளார். எம்பிரானுக்குத் தோழமை கொண்டொழுகிய ஆலாலசுந்தரர் என்று சிறப்பிக்கப்படுகின்ற சுந்தரமூர்த்தி நாயனாருடைய வரலாற்றோடு ஆரம்பமாகும் நாயன்மார்கள் வரலாற்றுக் காவியத்திலே, ஏழாந் திருமுறையினை அருளிச்செய்த சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தை 203 செய்யுட்களால் சேக்கிழார் பாடிப் பரவியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் செய்யுள் நடையிற் சொல்லிய செய்திகள் எல்லாவற்றையும் வசனநடையில் எளிமையாக நாவலர் பெருமான் நூலுருவில் வழங்கியிருந்தார். 1852இல் எழுதியிருந்த அந்த மூலநூலின் மீள்பதிப்பே இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Free online Ports

Articles Determining The brand new Australian On the internet Mobile Gambling enterprise No deposit Added bonus Now offers The idea And you will Requirement for