சோ.பத்மநாதன், சி.சிவலிங்கராஜா, செ.அன்புராசா (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
viii, 136+50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-7331-32-4.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழா -2020 ஆண்டிற்கான கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா கலையரங்கில் 22.03.2021 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 9.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வடமாகாணத்தில் கலைத்துறைக்கு சிறப்புத் தொண்டாற்றி தெரிவு செய்யப்பட்ட மூத்த கலைஞர்களுக்கு “கலைக்குரிசில்” விருதும், இளம் கலைஞர்களுக்கு “இளம் கலைஞர்” விருதும் வழங்கி வைக்கப்பட்டதுடன், 2019 இல் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட நூல்களுக்கு “சிறந்த நூற்பரிசு” விருதும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். வட இலங்கை தொடர்பான 21 படைப்பாக்கங்களுடன், தனியாக இலக்கமிடப்பெற்ற 50 பக்கங்களில், 39 பக்கங்களில் விருது பெற்றவர்களின் விபரங்களும், 11 பக்கங்களில் நிகழ்வுப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆறுமுக நாவலர் பெருமானின் கந்தபுராண மரபைப் பேணுவோம், தமிழ்ப் பண்பாட்டினைக் கற்று தமிழில் இலக்கியம் படைத்த ஐரோப்பிய துறவி லூயிஸ் டெய்சி அடிகள், மரபார்ந்த அறிவுக்கு-வாழ்வுக்கு மீளுதல், எம் பழமையை மீட்டிப் பார்க்கவைத்த கொடூர கிருமியே கொரொனா, மனித உடல், உளச் சமநிலை பேணலில் யோகக் கலையின் வகிபாகம், வட இலங்கையில் துறைமுகங்களும் தொன்மங்களும்: மயிலிட்டித் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு, தற்சார்பு பொருளாதாரமும் சிறுதொழில் முயற்சியும், போருக்குப் பிந்திய சூழலில் எமது சமூகம் எதிர்கொள்ளும் பண்பாட்டு நெருக்கடிகள், வடக்கில் பழமொழிப் பயன்பாடும் அது படும் பாடும், மன்னார் மக்கள் வாழ்க்கைமுறைமையில் பண்பாடு, வடக்கின் வாழ்வியற் பண்பாட்டுச் சுவடுகள், மல்லிகைத் தீவுக் கிராமத்தின் மரணச்சடங்கு, நகரம் சவப்பெட்டி (கவிதை), கனவு மெய்ப்பட வேண்டும் (சிறுகதை), ஊர்ப்பெயர் ஆய்வு-வவுனியா மாவட்டம், மிதி (சிறுகதை), மன்னாரின் பல்லினப் பண்பாடு, முசலியின் பாரம்பரிய கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்களும் அதன் புனிதத் தன்மைகளும், வடக்கின் பண்பாட்டில் மாதோட்ட மக்கள், யாழ்ப்பாணத் திருமண மண்டபங்கள் ஏற்படுத்தும் புதிய பண்பாட்டு உருவாக்கம்: சில குறிப்புகள், யாழ்ப்பாணப் பண்பாட்டு மரபின் அடையாளமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயில் ஆகிய தலைப்புகளில் இப்படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.