15172 அரசியல் சிந்தனை நூல்வரிசை : சிறு நூல்களின் தொகுப்பு.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 147 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15.5 சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் வெளிவந்துள்ள முதல் 10 சிறுநூல்களையும் தொகுத்து தனிநூலாக வெளியிட்டுள்ளனர். இதில் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையும் தமிழ் மக்களும் (சி.அ.யோதிலிங்கம்), இந்தியாவும் தமிழ் மக்களும் (சி.அ.யோதிலிங்கம்), நினைவுகூர்தல்-2017 (நிலாந்தன்), தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் (சி.அ.யோதிலிங்கம்), மோடியின் இலங்கைப் பயணமும் மலையகமும் (சி.அ.யோதிலிங்கம்), இந்து சமுத்திரமும் சீனாவும் (கே.ரீ.கணெசலிங்கம்), வட-கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் (சி.அ.யோதிலிங்கம்), இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வதேச அனுபவங்கள் (சி.அ.யோதிலிங்கம்), ஈழத்தமிழர் அரசியல் வரலாறு 1883 தொடக்கம் 1968 வவரை சுருக்கக் குறிப்புகள் பாகம் -1 (சி.அ.யோதிலிங்கம்), வடகொரியாவும் சர்வதேச அரசியலும் (கே.ரி.கணேசலிங்கம்) ஆகிய தலைப்புகளில் வெளிவந்த சிறுநூல்கள் பத்தும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64410).

ஏனைய பதிவுகள்

casino con depósito mínimo

Arescasino Top slots Casino con depósito mínimo 1. “Dr. No” (1962) -A resourceful British government agent seeks answers in a case involving the disappearance of