அனுதர்ஷி லிங்கநாதன். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல. 2, 2வது தளம், முதலாவது குறுக்குத் தெரு, புஷ்பா கொலனி, சாலிக்கிராமம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சென்னை 600093: பூவரசி பதிப்பகம், இல. 2, 2வது தளம், முதலாவது குறுக்குத் தெரு, புஷ்பா கொலனி, சாலிக்கிராமம்).
136 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-81322-34-6.
அனுதர்ஷி லிங்கநாதன் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தையை சொந்த இடமாகக் கொண்டவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் கற்கைகளில் இளமானிப் பட்டத்தைப் பெற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர். 2014இல் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையில் தொழிற்பயிற்சியைப் பூர்த்திசெய்து, தமிழ்த்தந்தி பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். சுடரொளி, கட்டுமரன் ஊடக வலையமைப்புகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருக்கோணமலை வளாகத்தின் உதலி விரிவுரையாளராகவும் சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இலங்கையின் அரசியல்வாதிகளை நேர்காணல்களின் ஊடாக சந்தித்து இலங்கை அரசியல் பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதில் கே.வேலாயுதம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ப.சத்தியலிங்கம், பொன்.செல்வராஜா, கந்தையா சிவஞானம், முத்து சிவலிங்கம், ம.க.சிவாஜிலிங்கம், கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம், அஸாத் சாலி, சிங்காரவேலு தண்டாயுதபாணி, விஜயகலா மகேஸ்வரன், எம்.எஸ்.எல்.அஸ்லம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவப்பிரகாசம் சிவமோகன், பைஸல் முஸ்தபா ஆகியோரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.