15177 இலங்கையின் அதிகாரப் பகிர்வு யோசனைகள்: கருத்துரைகளும் கண்ணோட்டங்களும்.

ரா.நித்தியானந்தன் (தொகுப்பாசிரியர்). கண்டி: பீ.சிவசுப்பிரமணியம், H.I.E. உயர் கல்வி நிறுவனம், 239, திருக்கோணமலை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கண்டி: லதா இம்பிரெஸ், 302, டீ.எஸ்.சேனாநாயக்க வீதி).

ஒை, 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இதில் இலங்கையில் தேசியம்: தேசியத்துவமும், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலுள்ள பிரச்சினைகளும் (M.O.A.D.சொய்சா), இலங்கையின் அதிகார பரவலாக்கலுக்கான வரலாறும் அது எதிர்நோக்கிய பிரச்சினைகளும் (Y.R.அமரசிங்க), பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகார பகிர்வு யோசனைகளின் சிறப்புகளும் குறைபாடுகளும்-ஓர் ஆய்வு (அம்பலவாணர் சிவராசா), சமத்துவமற்ற சமஷ்டி முறை மூலமாக மட்டுமே ஐக்கிய இலங்கைக்குள் உட்பட்டதாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் (ஏ.ஜே.வில்சன்), அதிகாரப் பகிர்வு இலங்கைக்கு ஏன் அவசியம்? (நவரட்ண பண்டார), ஒரு சமரச தீர்வை நோக்கி அதிகாரப் பகிர்வு யோசனைகள் (சுமணசிரி லியனகே), அதிகாரப் பரவலாக்கம் ஆகஸ்ட் 1991-1995 முரண்பாட்டு தீர்வு உபாயங்கள் (ஆனந்த வெலிஹேன), அதிகாரப் பரவலாக்கலும் அதன் புறநிலை யதார்த்தமும் (ரா.நித்தியானந்தன்), இலங்கையின் அதிகாரப் பரவலாக்கலும் முஸ்லிம்களின் அபிலாசைகளும் (S.H.ஹஸ்புல்லா), எங்களது அரசியல் பிரச்சினைகளுக்குள்ள ஒரே தீர்வு (S.W.R.D.பண்டாரநாயக்கவின் த சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையிலிருந்து பெறப்பட்ட உரையின் சாரம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளை அம்பலவாணர் சிவராசா, சைபுதீன், ரா.நித்தியானந்தன், எஸ்.ரவிச்சந்திரகுமார் ஆகியோர் தமிழாக்கம் செய்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

А как закачать мобильное аддендум 1xbet получите и распишитесь Андроид безвозмездно из должностного сайта?

Выучив регистрацию в маневренною версии беттер выжает приятный приветственный вознаграждение через фирмы. Размер выплаты врученных условных денег достаточно детерминироваться размером записанного новичком главного депозита нате