15188 புதிய அரசியல் கலாச்சாரமே இன்றைய தேவை.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

22 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 19ஆவது நூலாக வெளிவந்துள்ளது. அரசியல் கலாச்சாரம் பற்றிய சிந்தனை பலவீனமாக இருக்கின்ற தமிழ்ச் சூழலில் இச்சிறு நூல் அது பற்றிய உரையாடலை ஆரம்பிப்பதற்கான ஊக்குவிப்பை வழங்குகின்றது. இச்சிறு நூல் கொள்கை அரசியல், ஒன்றிணைந்த அரசியல், ஐக்கிய முன்னணி தந்திரோபாயம், புவிசார் அரசியல், அகமுரண்பாடுகள், சர்வதேச பிராந்திய அரசியல், மக்கள் பங்கேற்பு அரசியல் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. இதன்மூலம் பேசாப் பொருளை பேசமுற்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

15827 கம்பராமாயணத்தில் அறிவியல்.

இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: திருமதி சுப்பிரமணியம் பொன்னம்மா நினைவு வெளியீடு, ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).