15198 அதிகார நலனும் அரசியல் நகர்வும்: உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.

ரூபன் சிவராஜா. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).

360 பக்கம், விலை: இந்திய ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-93-881336-2-3.

ரூபன் சிவராஜாவால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைத்தொகுப்பில் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச அரசியல் விவகாரங்கள் குறித்த 50 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவை ஏற்கனவே காக்கை சிறகினிலே மற்றும் தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளில் வெளியாகி முகநூலிலும் பிரசுரிக்கப்பட்டவை. கடந்த ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற பல தேசிய எழுச்சிப்போராட்டங்களையும், அவை உருவாகக் காரணமாக இருந்த இன, மத சமூக காரணிகளையும் பல கட்டுரைகள் மூலம் அலசுவதோடு நிற்காமல் அவற்றை உருவாக்கிய வல்லரசுகளின் உள்நோக்கங்கள் மற்றும் நுண் அரசியல் காரணிகள் பற்றியும் விபரித்து எழுதி இருக்கிறார். உலக அரசியல் அரங்கில் எந்தெந்த யுத்தங்கள் எத்தனை ஆண்டுவரை என்னென்ன காரணங்களைக் காட்டி இழுத்தடிக்கப்பட்டன, கூடவே எந்தெந்த தேசிய விடுதலை போராட்டங்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் புவிசார் சர்வதேச நலன்சார் அரசியல் காரணிகள் மற்றும் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயம் செய்யும் அதிகார நலன் சார் அரசியல் நகர்வுகள் பற்றியும் ஆழமாக இந்நூலில் ரூபன் சிவராஜா ஆய்வு செய்திருக்கிறார். பனிப்போருக்கு  பின்னரான காலத்தில் எதிரும் புதிருமாக திகழும்  உலகின் இரு வல்லரசுகளாக விளங்கும் அமெரிக்கா மற்றும் ரஸ்யா எப்படியெல்லாம் தங்கள் பிராந்திய நலன்சார் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க தங்கள் ஆடுகளமாக மத்திய கிழக்கில் இருக்கும் நாடுகளை பாவிக்கின்றன என்பதை சிரியா பகுதி -1 பகுதி 2 பகுதி 3 ஆகிய கட்டுரைகள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

14135 தாந்தாமலை மாட்சி: தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு மலர்-2011.

பாலிப்போடி இன்பராஜா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: தாந்தாமலை முருகன் ஆலய பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா மலர்க்குழு, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). 215 பக்கம், 24 தகடுகள்,

14413 தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி.

வீ.பரந்தாமன். கிளிநொச்சி: பண்டிதர் வி.பரந்தாமன், கவின் கலைக் கல்லூரி, கனகபுரம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ்). 56 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 19.5×14.5 சமீ. உறவுமுறைச் சொற்கள் ஒருவரை