15204 இலங்கை மழை நீர் பாவனையாளரின் வழிகாட்டி.

தனுஜா ஆரியானந்த (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இலங்கை மழைநீர் சேகரிப்பு மன்றம் (LRWHF), இணவெளியீடு, இலங்கை வள நிலைய வலைப்பின்னல் (SRIWASH), 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: யூட்டிலிட்டி பிரின்டர்ஸ்).

124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ., ISBN: 978-955-1064-06-8-2.

மழைநீரின் முக்கியத்துவம் (C.S.வீரரட்ன, P.A.வீரசிங்க), மழைநீர் சேகரிப்பு விருப்புகள் (தேவா ஹப்புகொட), மழைநீர் சேகரிப்பில் உள்ள பொருளாதார சமூகப் பிரச்சினைகள் (ஆ.ஆ.அஹியார்), விடய ஆய்வுகள் (அஜித் பனாகொட, ஐ.னு.குருப்பு, நீல் பெரேரா) ஆகிய நான்கு பிரதான கட்டுரைகளுடன் ஏழு பின்னிணைப்புகளையும் இந்நூல் கொண்டுள்ளது. பின்னிணைப்புகளாக தேசிய மழை நீர் சேகரிப்புக் கொள்கை, வர்த்தமானி அறிவித்தல் (1986ஆம் ஆண்டு ந.அ.அ.ச. கட்டிடங்கள் கட்டிட விதிகளுக்கான திருத்தங்கள்), 3ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சட்டம், இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப் பொருத்தமான வடிவமைப்புப் படங்கள், மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளின் வடிவமைப்பும் நீர்வெளியேற்றியின் அமைப்புகளும் தேவையான பொருள்களின் பட்டியலும், மனித வலு நீரிறைக்கும்  இயந்திரங்களின் தேவையான பொருட்களின் பட்டியல், மழைநீரின் ஆரோக்கியத் தன்மையை இனம் காண்பதற்கான பட்டியல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

Diese 10 Traktandum

Content Hot To Burn Slot -Bonus: Double Double Maklercourtage Poker Geiles Erreichbar Spielbank Grausam Jackpots, Gaming Inaktives Spielerkonto Der Glücksspieler Hat Keinen Maklercourtage Vom Spielsaal