சேனக பண்டாரநாயக்க (மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 59 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-614-4.
மறைந்த தொல்லியல்துறைப் பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க (1938-2015) எழுதியதும் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டதுமான Continuities and Transformations: Studies in Sri Lankan Archaeology and History என்னும் பெயரில் 2012இல் வெளிவந்த நூலில் இடம்பெற்றிருந்த Feudalism Revisited: Problems in the Characterisation of Historical Societies in Asia the Sri Lankan Configuration என்ற ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கமே இதுவாகும். முன்னுரை/ நிலமானியம்-ஆசியாவினதும் இலங்கையினதும் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு/ ஆசியாவின் வரலாற்றுக் கால சமூகங்கள்/ இலங்கையின் சமூக உருவாக்கம்-ஐந்து நோக்கு முறைகள் (அனுபவ நோக்கிலான ஆய்வுகள், முடியாட்சிச் சமூகம் என்ற கருத்து, ஆசிய உற்பத்தி முறை என்ற எண்ணக்கரு, நில மானியம், பலநோக்க முறைகளின் கலப்பு)/ இலங்கையும் நிலமானிய உற்பத்திமுறையும்/ ஆசிய சமூகங்களில் அரசியல் அதிகாரம் மத்தியப்படுத்தல்/ நிலமானிய வகையும் உபவகையும் ஆகிய தலைப்புகளின் வழியாக இவ்வாய்வு விரிகின்றது. பின்னிணைப்புகளாக சோழர்கால அரசு அமைப்பின் அடிப்படை இயல்புகள், நவீனத்துக்கு முந்திய காலத்து அரசு உருவாக்கம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.