15214 திறன்களின் திறவுகோல்.

T.T.மயூரன் (இணைப்பாளர்), எஸ்.சுதர்சன் (பதிப்பாசிரியர் குழு). தெகிவளை: Centre for Children’s Happiness (GTE) Ltd. இல. 8, ரட்ணாகார பிளேஸ், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

v, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19 சமீ., ISBN: 978-624-5090-00-6.

இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவுத் திறன் விருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இவ்வழிகாட்டி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை, உயர் கல்வி, தொழிற்பயிற்சி மட்டத்தில் கற்றலை நிறைவு செய்த, வேலையற்ற இளையோரை தொழில் வாய்ப்புக்குள்ளோஅல்லது சுய தொழில்வாய்ப்புக்குள்ளோ கொண்டு செல்வதற்கான திறன்விருத்தி வலுவூட்டலையும் ஆயத்தப்படுத்தலையும் மேற்கொள்ளும் கருவியாக இச்செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிமுகம், தொழில்வாய்ப்புக்கான சுய ஆய்வும் வழிகாட்டலும், தனிமனித ஆளுமையூடாக தொழிலையும் திறன்களையும் அடையாளம் காணல், தொழில்பெறும் திறன்கள், தொழில்சார் அக வளங்கள், தொழில் வாய்ப்புக்காகத் தயார் படுத்தல் வழிமுறைகள், தொழில் முனைவோர் தொழில் முயற்சியாண்மை ஆகிய ஆறு அத்தியாயங்களில் இவ்வழிகாட்டி எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் குழுவில் எஸ்.சுதர்சன், ராம் பாபு போட்சா, மாடசாமி வேலுசாமி, நிஷாந்தன் விஸ்வலிங்கம், ஸ்ரீபவன் பாலசிங்கம், ஏ.ஈனோ ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Pinco Аддендум, Закачать для Подвижных вдобавок Пк

Content Предоставляет династия PinCo вероятие играть бесплатно? Бацать получите и распишитесь Должностном Веб сайте Pinco Casino Интерактивный во Стране Казахстане Абразия образования учетной склеротичка на

16455 அக்கினிச் சிறகாய்.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், இல. 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2021. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி). xii, 104