15215 1975ம் ஆண்டு நடைபெற்ற கிராம அபிவிருத்தி கருத்தரங்குகளின் அறிக்கை.

இலங்கை மன்றக் கல்லூரி. கொழும்பு 7: இலங்கை மன்றக் கல்லூரி (Sri Lanka Foundation Institute), சுதந்திரச் சதுக்கம், தபால் பெட்டி எண் 1203, 1வது பதிப்பு, டிசம்பர் 1975. (கொழும்பு 2: லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ், 41, W.A.D. இராமநாயக்க மாவத்தை).

(5), 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

இலங்கை மன்றக் கல்லூரியில் 1975 ஜீன் மாதம் 9ஆம் திகதி தொடக்கம், நவம்பர் 1ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதியில் நடைபெற்ற 10 கருத்தரங்குகளை உள்ளடக்கியது. வரவேற்புரை (இயக்குநர், இலங்கை மன்றக் கல்லூரி), சமூக அபிவிருத்தியும் அதனைக் கிராம ரீதியில் அணுகும் முறையும் (பி.ஜே.அருள்நாயகம்), இலங்கையின் அபிவிருத்திக்கு கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஆற்றும் பணி (பி.எம்.வைரவப்பிள்ளை), இலங்கையின் அபிவிருத்திக்கு கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஆற்றும் பணி (பி.கே.பள்ளவத்தை), கிராம அபிவிருத்திக்கு கிராம ஆற்றலை ஒன்றுதிரட்டிப் பயன்படுத்துதல் (ஆ.க.ச.முத்துவேல்), கிராமத்தில் விரிவுபடுத்தப்பட்ட சேவைகள் (எஸ்.சிவானந்தன்), இலங்கையின் சமூக பொருளாதார நிலை (சரோஜா கந்தையா), கிராம அபிவிருத்திச் சங்கங்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் (என்.ஜெயநாதன்), உற்பத்தித் திறன் அதிகரிப்பின் முக்கியத்துவம் (எஸ்.செல்லையா), கிராமியத் தொழிலாளியும் இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்தியும் (வி.நித்தியானந்தன்), விவசாய அபிவிருத்தித் திட்டமிடலில் புள்ளிவிபரங்களின் முக்கியத்துவம் (இரா.சிவச்சந்திரன்), கிராம அபிவிருத்திக்கு திட்டமிடலும் அமுலாக்கலும் மதிப்பீடு செய்தலும் (ஆர்.நடராசா), கூட்டுறவு அபிவிருத்தி (கே.பி.இராஜரட்ணம்), கமத்தொழில் காப்புறுதித் திட்டம் (ஜே.ஏ.இரத்தினசிங்கம்), கிராம அபிவிருத்தியில் சிரமதானத்தின் பங்கு (ஏ.ரி.ஆரியரத்தினா), குழுநிலை அறிக்கை, விவாதம்: ”இலங்கையின் எதிர்காலம் கிராம அபிவிருத்தியில் மட்டுமே தங்கியுள்ளது”, கருத்தரங்கின் சிபாரிசுகளும் தீர்மானங்களும், கிராம அபிவிருத்தி சம்பந்தமான கருத்தரங்குகளில் பங்குபற்றியவர்கள் பட்டியல் ஆகிய விடயதானங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

Best Microgaming Apricot Ports

Articles Not sure the best places to gamble? Videoslots Casino Safer Gaming Thunderstruck: Wild Lightning Slot Free Enjoy RTP out of Thunderstruck Nuts Lightning Video