15224 நீதிமுரசு 2008.

அகல்யா முருகானந்தன் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(40), 229 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2008ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 43ஆவது (ஆட்சி 59, முரசு 43) இதழ், பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. அவற்றுள் ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், சட்டமுந் தமிழும் (க.வி.விக்னேஸ்வரன்), உள்ளக இடம் பெயர்வாளர்களின் உரிமைகள் (எஸ்.துரைராஜா), பாவனையாளர் பாதுகாப்புகள் (எஸ்.செல்வகுணபாலன்), தனிமனித உரிமைகளும் சிறுபான்மையினர் உரிமைகளும்: தெளிவும் தேவையும் (வி.ரி. தமிழ்மாறன்) ஆகிய முக்கிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் கட்டுரைகளாக அதிகார வேறாக்கக் கோட்பாடு-ஓர் அறிமுகம் (ந.சிவகுமார்), உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் சவால்கள் (மரியதாஸ் யூட் டினேஷ்), சூழல் பாதுகாப்புத் தொடர்பில் இந்திய இலங்கை நீதிமன்றங்களின் அண்மைக்காலப் போக்கு (சா.அன்புவதனி), நிர்வாகச் சட்டத்தில் இயற்கை நீதிக் கோட்பாடு (கலைமதி கனகசிங்கம்), சர்வதேச நிறுவனங்கள் (ஆர்.ஆர்.உஷாந்தனி), வழக்காறில்லாத வழக்காற்றுச் சட்டம் (நடராஜா ரஜீவன்), திருமணத்தின் பின்னரான சட்ட விளைவுகளில் பால்நிலைச் சமத்துவமும் பெற்றோரின் கூட்டுக் கடப்பாடும் (நிருத்திகா சிவநேசன்), ஈன்றெடுத்த இறைமை (குமாரவடிவேல் குரபரன்), தனிநாடொன்றுக்கான சர்வதேசச் சட்டத் தேவைப்பாடுகளும் சர்வதேச யதார்த்தங்களும் (கிரிசாந்தன் பொன்னத்துரை), நாம் தமிழை வளர்த்ததென்று சொல்வதிலும் பார்க்க தமிழால் வளர்ந்ததே அதிகம் (காசிவத்தம்பி), விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே (இ.ஜெயராஜ்), கலை இலக்கியங்களும் பின்னவீனத்துவமும் (சபா.ஜெயராஜா), தமிழிலக்கியங்களில் நீதியும் வழக்கும் (அ.சண்முகதாஸ்), தேமதுரத் தமிழோசை காக்க வாரீர் (சு.செல்லத்துரை), நால்வகை கலை வடிவங்கள் (துரை மனோகரன்), விடுதலை விசாரணை (பழனிபாரதி), கவிதையில் ஓர் கதை பயணம் பேருந்தும் இறுதி ஆசனமும் (இ.பிரியதர்ஷினி), பெண்ணென பிறந்துவிட்டால் (மேனகா கேசவன்), விழித்த மனது (எச். எம்.நபீரா), அஸ்தமன அர்த்தம் (ஜே.பீ.ஏ.றஞ்சித்குமார்) நல்லனவே எண்ணல் வேண்டும் (அ.குககுமாரன்), இன்று (மா.குருபரன்), விடியலைத் தேடி (பவனீதா லோகநாதன்), உலகமயமாதல் உருவாக்கும் சமூக விளைவுகள் (சுபாஞ்சலி திருக்குமாரலிங்கம்) ஆகிய ஆக்கங்களும்; இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46157).

ஏனைய பதிவுகள்

Pokemon Fomantis

Content Бонус За Добредојде Take pleasure in Real time Mahjong 88 On line Into the The brand new Flamantis Casino Monetary Possibilities On the Flamantis