15225 நீதிமுரசு 2011.

மேனகா கந்தசாமி (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 266 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ., ISSN: 2012-614X.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2011ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 46ஆவது இதழ் (ஆட்சி 62, முரசு 46) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், கற்பத் தடை ஏன் செய்தாய்? (விகடகவி மு.திருநாவுக்கரசு), சேவக உரிமைகளும் அவற்றைக் கைதுறத்தலும் (கா.தட்சணாமூர்த்தி), முள்ளிவாய்க்கால் மண்மேடே (இரா.சடகோபன்), மொழி உரிமைகள் (எஸ்.சந்திரராஜா), கருக்கலைப்பு ஓர் சமூக சீர்கேடு (சுவயில் அஷீக்), கருணைக் கொலையும் இந்தியாவின் அருணா செண்பக் வழக்கத் தீர்வும்: ஒரு கண்ணோட்டம் (ஜனஹா செல்வராஜ்), 1977ம் ஆண்டு 21ம் இலக்க பிரிவிடல் சட்டம் (சுபாஜினி கிஷோ அன்ரன்), பெண்ணியக் கோட்பாடு (துளசிகா கேசவன்), சட்ட ஆட்சிக் கோட்பாடும் எமது இலங்கை அரசியலமைப்பும் (மடோனா மரியதாஸ்), யார் தேசவழமையினால் ஆளப்படுவர்? (ஷர்மிலா மல்ஹர்தீன்), வீதிச் சிறுவர்களின் உரிமைகள் மீதான துஷ்பிரயோகம்: இலங்கை மற்றும் சர்வதேசம் (ரமீஸ் மொஹம்மட்), யாப்புப் பகுப்பில் சமஷ்டி (த.தனுஷன்), 18ஆவது அரசியல் அமைப்பிற்கான திருத்தமும் இலங்கையின் எதிர்காலமும் (யோகானந்தி யோகராசா), மனித உரிமைகளின் வரலாறும் அதன் அபிவிருத்திகளும் ஒரு சட்டவியல் நோக்கம் (ஏ.ஜே.முஹம்மட் நவாஸ்), புதுக்கவிதை (இ.ஜெயராஜ்), இலக்கிய மதிப்பீட்டில் வெளிப்பாடு தடுப்பியற் கோட்பாடும் எதிர்வினைப்பாடுகளும் (சபா.ஜெயராசா), திருக்குறளின் அரசியல் நோக்கு (துரை மனோகரன்), திருக்குறளும் பொருளியலும் (கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்), இழந்த மற்றுமொரு சந்தர்ப்பம் 1989/90: பிரேமதாச-விடுதலைப் புலிகள் பேச்சுகளின் தோல்வி பற்றிய பின்னோக்கிய தேடல் (ராஜரட்ணம் ருக்ஷான்), ஊடகமும் தமிழும் (அஷ்ரப் சிஹாப்தீன்) ஆகிய ஆக்கங்களும், பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன், பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன், அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் சி.அ.யோதிலிங்கம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஆகியோருடனான நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50180).

ஏனைய பதிவுகள்

Real cash Cellular Casinos 2024

Various video game is actually a key research factor, making certain there’s anything for everybody. Eatery Local casino, such, try acknowledged as the finest real