15234 குடும்போதயம்: குடும்ப நிதியம்-வழிகாட்டி.

க.திருநாவுக்கரசு (அமைப்பாளர்). புங்குடுதீவு: வட இலங்கை சர்வோதயம், பெருங்காடு, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூண்டு வீதி).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இவ்வழிகாட்டியானது, சர்வோதய அமைப்பின் செயல்திட்டங்களில் ஒன்றான, அதன் 22ஆவது நிர்மாணத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட குடும்போதய நிதியம் பற்றிய விளக்கத்தை வழங்கும் நோக்கில்  வட இலங்கை சர்வோதய அமைப்பாளர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களால் தயாரிக்கப்பட்டது. 1985இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் இலட்சியம், நோக்கம், செயல்விதிகளை இச்சிறு கைந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

14919 தோழர்: இதுவொரு நினைவின் பதிவு (அமரர் சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவு மலர்).

மலர்க் குழு. கனடா: தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2016. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 87 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. “சண்”