15236 பிள்ளைகள்: சமாதானத்தின் சரணாலயங்கள்: ஆக்கப் பணிக்கு ஓர் அழைப்பு.

நடுநிலை சந்திப்புக் குழு. இலங்கை:  வரன்முறையற்ற சந்திப்புக் குழு, பிள்ளைகள்-சமாதானத்தின் சரணாலயங்கள், 1வது பதிப்பு, மே 1998. (கொழும்பு: சுப்ரீம் பிரின்டர்ஸ்).

26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கையில் ஆயுதப் பிணக்கினால் பாதிப்புற்ற பிள்ளைகளின் உரிமைகளைப் பிரச்சாரம் செய்து முன்னேற்றுதலும் பேணுதலும் தொடர்பாக வெளியிடப்பட்ட சுருக்கமான இடைக்கால அறிக்கை இது. இக் குழுவில் பங்குபற்றியோர் கீழ்க்காணும் அமைப்புகளினதும் முகவர்களினதும் உறுப்பினராவர். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மனிதநேய முகவரகங்களின் பேரவை, செஞ்சிலுவையின் சர்வதேசச் செயற்குழு, இலங்கைத் தேசிய சர்வோதயச் சங்கம், பிள்ளைகள் சாசனம் தொடர்பான தேசிய கண்காணிப்புச் செயற்குழு, ரெட் பார்ணா, ஐ.நா. சிறுவர் காப்பு நிதியம், ஐ.நா. சிறுவர் நிதியம், ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகர், ஐ.நா. சனப்பெருக்க நிலையம், ஐ.நா. வதிவு இணைப்பாளர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார ஸ்தாபனம். (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

‎‎las vegas Community Local casino/h1>