15243 குற்றத் தடுப்புக் கைநூல்: குற்றங்களில் இருந்து விலகி இருப்பது எப்படி?.

லக்ஷ்மன் டி.சில்வா. கொழும்பு 9: இலங்கை ஆசிய குற்ற நிவாரண நிறுவகம், சிறைச்சாலை தலைமையகம், 150, பேஸ்லைன் வீதி, 3வது பதிப்பு, 2016, 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 2010. (பத்தரமுல்ல: இந்தி கிரியேஷன்ஸ், 654/8A, முவன்ஹெலவத்த 2ஆம் ஒழுங்கை, தலாஹேன).

(2), 50 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0387-02-1.

இச்சிறிய கைநூலின் மூலம் பொது மக்கள் குற்றத்திற்கு இலக்காகாமல் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு உரிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுடைய உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்குமான வேலைத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகினறது. அனேகமான குற்றங்கள் ஒருவரின் அறியாமையாலும், கவனயீனத்தாலும், எச்சரிக்கை இன்மையாலும் நிகழ்கின்றன. அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் பலவும், மிகவும் பயனுள்ள தொலைபேசி இலக்கங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. குற்றத்திற்கு இலக்காகாமல் இருத்தலும் குற்றத்தை குறைத்துக் கொள்ளலும், குற்றங்கள் சம்பந்தமான பயத்தைக் குறைத்துக்கொள்ளுதல், வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லும்போது கவனிக்க வேண்டியவை, வீட்டை வாடகைக்குக் கொடுக்கும்போதும் குத்தகைக்கு எடுக்கும் போதும் விற்கும் போதும் அவதானிக்க வேண்டியவை, உங்கள் தொலைபேசி, பொதுப் போக்குவரத்தில் அல்லது வாடகை வாகனங்களில் பயணிக்கும்வேளை கைக்கொள்ளவேண்டிய நடைமுறைகள், நீங்கள் வாகனத்தைச் செலுத்தும்போது கைக்கொள்ளவேண்டிய அடிப்படை விதிகள், பெண்களுக்கு உதவிபுரியும் வழிகள், பாலியல் துஷ்பிரயோகம் பற்றி அறியவந்தால் செய்யவேண்டியது என்ன?, மதுபானமும் உங்கள் பிள்ளைகளும், தொடர்மாடி வீடுகளின் பாதுகாப்பு எனப் பல்வேறு விடயங்கள் பற்றிய ஆலோசனைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

29 Free No deposit Extra 2024

Content No-deposit Incentive Gambling establishment Wagering Standards – go Put C1 To possess fifty Free Spins To the Aloha! Queen Elvis From the 7bit Local