15245 இயல்பு மீறிய குழந்தைகள்.

முருகு தயாநிதி. மஹரகம: சோபிஜயஹரி, முருகு தயாநிதி, சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, (5), 109 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-35603-4-6.

நவீன பிள்ளை உளவியல் அல்லது விசேட தேவையுடைய பிள்ளைகள் என்ற விடயம் தொடர்பாக அண்மைக்கால ஆய்வுகளையும் அவை தொடர்பான முடிவுகளையும் தமிழ் வாசகர்களுக்கு, குறிப்பாக இத்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் பயனுள்ள வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வேதம், தொல்காப்பியம், நன்னூல் எனப் பல நூல்களில் இவை தொடர்பாக கூறப்பட்டவற்றை தேடிஎடுத்து விளக்குகின்றார். இதன்மூலம் விசேட கல்வியானது தமிழுக்குப் புதிதல்ல என நிறுவுகின்றார். மீத்திறனுடைய பிள்ளைகள், ஆக்கத்திறனுடைய பிள்ளைகள், மெல்லக் கற்கும் மாணவர்கள், உடல் இயலாமையுள்ள குழந்தைகள், கற்கும் திறனில் குறைபாடுடைய மாணவர்கள், பிழையான சீராக்கமுடைய பிள்ளைகள், உட்படுத்தற் கல்வி, இலங்கையில் கல்வி பெறும் வாய்ப்பு ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Slots Gamble Online

Blogs Free slots 5 deposit: Position Video game How do Online slots Select Which Victories? Would it be Safer to Fool around with More than

Why is Playing Haram?

Articles The newest Arguments Against Chess | what time canadian grand prix When And just why Are The forex market Experienced Haram? Is actually Baseball