15246 21ஆம் நூற்றாண்டுத் திறன்கள்:கற்றலும் கற்பித்தலும்.

தை.தனராஜ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 59 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-690-8.

21ஆம் நூற்றாண்டுத் திறன்கள் என்பவை அறிவு, மனப்பாங்குகள், பண்புக்கூறுகள், நடத்தைகள் முதலானவற்றைக் கொண்ட ஒரு பரந்த தொகுதி எனலாம். இத்திறன்கள் பிரயோகத் திறன்கள், மென்திறன்கள் என்றவாறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. தகவல் தொடர்பாடல் தொழின்முறையியல் (ITC) துறையில் ஏற்பட்டு வருகின்ற புரட்சிகரமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ள இன்றைய உலகில் கல்வியிலும் தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமெனில் மேற்படி திறன்கள் அத்தியாவசியமானவை என வலியுறுத்தப்படுகின்றது. இந்நிலையில் 21-ஆம் நூற்றாண்டுக்குரிய ஆறு திறன் தொகுதிகளையும் அவற்றை கற்பிக்கும் வழிமுறைகளையும் அவற்றை வினைத்திறனுடன் கற்பிப்பதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புக் கூறுகளையும் பற்றி இந்நூல் அறிமுகம் செய்கின்றது. இலங்கை தகவல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் மானிடவியல் மற்றும் விஞ்ஞானங்கள் பீடத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நூலாசிரியர் தை.தனராஜ், கற்பித்தல் மற்றும் கல்வி நிர்வாகத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

16110 அன்புநெறி சிறப்பு இதழ் : சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி நினைவு மலர்.

வ.விசுவலிங்கம், தி.விசுவலிங்கம். கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50 Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கனடா: பாரதி பதிப்பகம்). 52 பக்கம், புகைப்படத் தகடுகள்,