15251 கலைத்திட்ட அடிப்படைகள்.

ப.மு.நவாஸ்தீன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 84 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-47-4.

கலைத்திட்டம்- அறிமுக நோக்கு, கலைத்திட்ட அணுகுமுறைகள், கலைத்திட்ட வகைகள், கலைத்திட்டத்தில் தத்துவ அடிப்படைகளின் செல்வாக்குகள், கலைத்திட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் கல்வித் தத்துவக் கோட்பாடுகள், கலைத்திட்டமும் சமூகப் பொருளாதார அம்சங்களும், கலைத்திட்டமும் உளவியலும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்வித்துறையில் கலைத்திட்டம் ஒரு முக்கிய இடம் பெறகின்றது. கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டம் எனலாம். முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான முறைசார்ந்த அல்லது முறைசாரா வகையில் கல்வியை வழங்குகின்ற சகல தாபனங்களும் தாம் வழங்குகின்ற கற்றல்-கற்பித்தல் செயன்முறை தெடர்பாக முறையான திட்டமொன்றைக் கொண்டிருக்க வேண்டியதாகவுள்ளது. இத்தாபனங்களில் சேவையாற்றும் நபர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் கலைத்திட்டம் தொடர்பான போதுமான அறிவைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்நூல் அவர்களுக்கு வேண்டிய கலைத்திட்டம் சார்ந்த அடிப்படை அறிவை வழங்குகின்றது. இந்நூல் 159ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Hong kong Information & Analysis

Content Titanbets golf betting | Regarding the Hong kong Jockey Club Horse Racing Overall performance & Greyhound Racing Performance How to locate A knowledgeable Odds