15253 பழந்தமிழில் கல்விச் சிந்தனை.

முருகு தயாநிதி. மஹரகம: சோபிஜயஹரி, முருகு தயாநிதி, சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xi, 80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-35603-1-5.

பழந்தமிழில் உள்ள கல்விச் சிந்தனைக்கும் நவீன கல்விக்குமான இடைவெளியினைக் காட்டி பண்டைய தமிழ்க் கல்வியில் இருந்தே நவீன கல்வி முகிழ்ந்தமையினை எடுத்துக்காட்டுடன் முன்வைக்கிறார். இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும். நவீன கல்விதான் எல்லாமே என்ற நிலையில் இருக்கின்ற கல்வி உலகிற்கு இந்நூலாசிரியரது பண்டைக் கல்வி பற்றிய எண்ணக்கரு வியத்தகு செய்திகளை வழங்கி நிற்கின்றது.   இந்நூலில் சுவாமி விபுலாநந்த அடிகளும் கங்கையில் விடுத்த ஓலையும் கல்வி பற்றிய நோக்கு, வீரம் விளைநிலத்தில் கல்விச் சிந்தனையும் இன்றைய கல்வி நிலையும், தலயலங்கானத்துச் செருவென்றபாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சியும் மதுரை மாநகரின் இன்றைய கல்வி நிலையங்களும், கல்வியின் பிரதான செல்நெறிகளைத் தெளிவுபடுத்தும் பண்டைய தமிழ் இலக்கியங்கள், கற்பித்தல்-கற்றலுக்கான மூலத்தைத் தெளிவுபடுத்திய தொல்காப்பியம், வாழ்வை வெற்றிகொள்ளும் வள்ளுவனின் கல்விச் சிந்தனைகள், கற்றல் திறன்களை மேம்படுத்துதல், தமிழ் எழுத்துக்களைக் கற்பதற்கான சிக்கல்களும் தீர்வுகளும் ஆகிய எட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64915).

ஏனைய பதிவுகள்