15255 மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம்: ஒரு விளக்கநிலை நோக்கு.

சோ.சந்திரசேகரம், மா.கருணாநிதி. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தை).  

96 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 125., அளவு: 21.5×14.5 சமீ.

கொழும்புப் பல்கலைக்கழகக் கல்விப் பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம், கலாநிதி மா.கருணாநிதி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்நூல் மீண்டும் ஆங்கிலம் பாடசாலை நிலையில் பயிற்றுமொழியாகக் கொள்ளவேண்டுமென்று கொள்கை வகுப்பாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கருத்துகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அதன் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்கின்றது. ஆங்கில மொழியை முழுப் பாடசாலை முறையிலும் அல்லது குறிப்பிட்ட சில பாடசாலைகளிலாவது பயிற்றுமொழியாக மீண்டும் அறிமுகம் செய்வது எந்தளவுக்குப் பொருத்தமானதொரு கல்விசார் நடவடிக்கை? இத்தகையதொரு ஏற்பாட்டினால் ஏற்படக்கூடிய கல்விசார் மற்றும் சமூக கலாசார விளைவுகள் எவை? இவ்விடயங்களை ஆராய்வதற்கு இலங்கையின் கல்வி வரலாற்றில் ஆங்கிலவழிக் கல்வி இடம்பெற்ற காலத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் பற்றி நோக்குகின்ற அதே வேளையில், இலங்கையின் கல்விமுறையில் ஆங்கில மொழிக்குரிய இடம் யாது என்றும் இந்நூல் ஆராய விளைகின்றது. அறிமுகம், இந்நூலின் நோக்கங்கள், இலங்கையில் ஆங்கிலக் கல்வி: ஒரு வரலாற்று நோக்கு, மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம், முடிவுரை ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, போதனாமொழி மாற்றத்தின் பின்னணி, பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி வெற்றிபெற்றுள்ளதா?, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்றுமொழிப் பிரச்சினை, முடிவுரை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்