15257 ராஜஜெயம்: மணிவிழா மலர் 2020.

ஜெயலட்சுமி இராசநாயகம். யாழ்ப்பாணம்: திருமதி ஜெயலட்சுமி இராசநாயகம் மணிவிழாக் குழுவினர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

422 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-7421-02-5.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினூடாக ஆசிரியர்களுக்கு கல்வித் துறையில் வழிகாட்டி வந்த திருமதி ஜெயலட்சுமி இராசநாயகம் அவர்களின் மணிவிழா ஞாபகார்த்தமாக அவரது மாணவர்களால் தொகுக்கப்பெற்றதும் கல்வியியலாளர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் அவ்வப்போது எழுதியவையுமான 51 கல்வியியல் துறைசார் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இம்மலரின் பதிப்பாசிரியர் குழுவில் சந்திரமௌலீசன் லலீசன், இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா, இராமலிங்கம் சத்தியேந்திரம்பிள்ளை, திருமதி ஞானசக்தி கணேசநாதன், திருமதி சத்தியா ரஞ்ஜித் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஆரம்பப் பிரிவு மாணவரின் உளநலம் பேணுதல், மாணவர்களின் சமூகத்திறன் விருத்தி, கற்றலுக்குத் தடையாகவுள்ள காரணிகள், கற்றல் ஆர்வத்தை அதிகரித்தல், சமுதாய மாற்றத்தில் ஆசிரியர் பாடசாலைகளின் வகிபங்கு, ஆசிரியர்களின் வேலைத் திருப்தி, ஆசிரிய மாணவ இடைவினையுறவு, நவீன ஊடகங்களும் கற்றல் பரிமாணங்களும், தமிழ்க் கல்வி மரபில் ஆசிரியத்துவம், இலங்கையில் பெண் கல்வி, வகுப்பறை முகாமைத்துவம், பாடசாலைகள் அற்ற கல்வி, முன்பள்ளிக் கலைத்திட்டம் என விரிந்த பகைப்புலத்தில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14555 ஜீவநதி ஐப்பசி 2011: கே.எஸ்.சிவகுமாரனின் பவளவிழாச் சிறப்பிதழ் 2011.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒப்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).