15268 சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள்: சில அவதானிப்புகள்.

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார். யாழ்ப்பாணம்: ஆர்.கிருஷ்ணகுமார், எழுத்து வெளியீடு, 15ஃ23 மாரி அம்மன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2014. (யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை அச்சகம்).

xi, 58 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-41-1990-1.

ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவிய மொழி, சமயம், பண்பாடு, சாதி, இனம் ஆகிய யாவற்றையும் மேவி கல்வி என்பது முதன்மை பெறத் தொடங்குவதையும், அந்த மாற்றத்தின் முகவர்களாகப் பிரித்தானிய காலனித்துவமும், கிறிஸ்தவ மிஷனரிமார்களின் சமய, கல்விச் செயற்பாடுகளும் இடம்பெறுவதையும் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியவர்களாக சுதேச மதத்தைச் சேர்ந்தவர்களும் செயற்படும் போக்கினையும் சைவவித்தியாவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் காட்டுகின்றன. அக்காலத்தில் பத்திரிகைகளில் வந்த செய்திகளையும், சங்கத்தினரின் வருடாந்த அறிக்கைகளையும் வைத்து இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது. இவ்வாய்வு சங்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளை மையப்படுத்துவதற்காகக் கூறப்பட்டபோதும், கணிசமான பகுதி ”சமாசனம்” பற்றய முரண்பாட்டுக்குச் செலவிடப்பட்டுள்ளது. ”மேற்படி சங்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள் குறித்த இக்கட்டுரை, அரச ஆதரவோடு கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த மதமாற்றத்தை சங்கம் எதிர்த்து நின்றதையும், யாழ்ப்பாணம் தொடக்கம் வன்னி, மலையகம், கிழக்கிலங்கை வரை தன் கல்விப் பணியை விரிவுபடுத்தியதையும், ஏழைப்பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளித்ததையும் சைவாசிரியர்களைப் பயிற்றுவிக்க ஓர் ஆசிரிய கலாசாலை நிறுவியதையும் தொழிற்கல்விக்குப் பாடவிதானத்தில் இடமளித்ததையும் குறிப்பிட்டாலன்றிப் பூரணமாகாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” (சோ.பத்மநாதன், தலைவர், சைவ வித்தியாவிருத்திச் சங்கம், 2014).

ஏனைய பதிவுகள்

Mahjong Spiele Kostenlos Novo Spielautomaten

Content Columbus deluxe Online -Spielautomaten: Jackpot Bells Die Auszahlungstabelle Bei Starburst Online Spiele Die Top Merkur Spielautomaten Jetzt Auch Alles Spitze King Of Luck Welche