15271 மெய்கண்டான் மணிவிழா மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. பண்ணாகம்: மெய்கண்டான் மகா வித்தியாலயம், பழைய மாணவர் சங்க வெளியீடு, பண்ணாகம், 1வது பதிப்பு, ஜீன் 1988. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை).

(4), 64 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

கல்லூரி கீதம், முன்னுரை, ஆசியுரைகளுடன் இம்மலரில், மெய்கண்டான் தாபகர் திரு மு.கந்தையா, மெய்கண்டான் வரலாறு, அதிபரின் அறிக்கை, இவ்வித்தியாலயத்தில் இன்று சேவையில் இருப்போர், மெய்கண்டான் பழைய மாணவர் சங்கம், கற்றுணர்ந்தொழுகு, குறும்பு செய்யும் குழந்தை முருகன், செய்தற் கரியவை செய்த பெரியார், எங்கள் இன்பத் தமிழ், அதிபர் ஸ்ரீநிவாசனின் அரிய சேவை, ஆசிரிய சிரோண்மணி அப்பாத்துரை, எதிர்கால சமுதாயம் வேண்டி நிற்கும் கல்வி, மணிவிழாவில் இரண்டு மகத்தான வைபவங்கள், சூரியனின் கதிர்களும் அவற்றின் பிரயோகமும், மணிவிழாவுக்கு நிதியுதவினோர், முத்தமிழ், நாகரிகமும் பண்பாடும், பண்டிதராக உயர்ந்த பழைய மாணவன், மாணவனின் கல்வியும் மொழியும், மெய்கண்டானில் முன்னர் சேவையாற்றியோர், எது உண்மை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளும் தகவல்களும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன. மலர் வெளியீட்டுக் குழுவில் பண்டிதர் அ.ஆறுமுகம், பண்டிதை பொன். பாக்கியம், க.வாமதேவன், ஆ.இராசநாயகம் (அதிபர்), வே.சண்முகலிங்கம் (ஆசிரியர்) ஆகியோர் பங்காற்றியுள்ளனர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8331).

ஏனைய பதிவுகள்

5 Finest Dogecoin Casinos within the 2024

Articles Greatest Dogecoin Gambling enterprises 2024 DOGE kingdom gambling enterprise extra Gambling Internet sites Bitcoin Gambling enterprise Reviews Considering My personal Sense Dogecoin casino web

13057 குறள் தாழிசை.

வேதா இலங்காதிலகம். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xv, 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: