மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், சுன்னாகம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
lxxxvii, 455 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின்; நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலை அறிக்கைகள், பாடசாலை வரலாறு பற்றிய கட்டுரை, மற்றும் ஆசிரியர், மாணவர்களின் ஆக்கங்கள் என்பனவற்றுடன் வெளிவந்துள்ள பாரிய வரலாற்றுத் தொகுப்பு இது. இம்மலரின் ஆக்கங்கள் அனைத்தும் ஆசிச் செய்திகள், வாழ்த்தியல், பேருரையியல், வரலாற்றியல், நினைவியல், கல்லூரி ஆசிரியர் மாணவர் கருத்தியல், ஆய்வியல் ஆகிய பிரிவுகளில் வகுக்கப்பட்டுள்ளன. “ஆய்வியல்” பிரிவில் பல்துறை விற்பன்னரான பண்பாளர் சுப்பையா நடேசபிள்ளை(வி.சிவசாமி), மீயறிகையும் எழுதும் முயற்சியும் (சபா ஜெயராஜா), சம்ஸ்கிருத இலக்கியங்களில் காணப்படும் புராதன இந்தியரின் கேளிக்கைகள் திருவிழாக்கள் (ஸ்ரீகலா ஜெகநாதன்), நிதி நெருக்கடியும் உலகப் பொருளாதாரத்தில் அதன் விளைவுகளும் (க.தேவராஜா), ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும் (அ.ஸ்ரீகாந்தலட்சுமி), நினைவாற்றலும் மாணவர்களும் (அஜந்தா கேசவராஜா), பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும் (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்), இணுவையூர் சின்னத்தம்பிப் புலவரின் பஞ்சவன்னத்தூது பற்றிய ஒரு ஆய்வு (கார்த்திகாயினி கதிர்காமநாதன்), சிறுவர் இலக்கியக் கோலங்களும் அறுவடைகளும் (தம்பு சிவசுப்பிரமணியம்), தொற்றா மற்றும் தொற்று நோய்களை தவிர்த்தல் எப்படி? (ஜெயந்தி), இயற்கையோடு தமிழ் பேசும் சோலைக்கிளி (இராஜி கெங்காதரன்), இந்து மெய்ஞானிகளின் விஞ்ஞானச் சிந்தனைகள் (என்.பி.ஸ்ரீந்திரன்), சாதகமற்ற கற்றல் பின்புலம் கொண்ட பிள்ளைகளுக்கான நாளாந்த வகுப்பறைகள் (கணேசபிள்ளை சிவகரன்), முரண்பாடுகளற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம் (விஜிதா பிரதாபன்), இராமநாதன் கல்லூரியின் இணைபிரியாத உறவுகள்;-பாலா ரீச்சர், நாகரத்தினம் ரீச்சர் (பா.அருணாசல முதலியார்), இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்கள் மேற்கொண்ட கோவில் புனருத்தாரணப் பணி (செல்வநாயகி ஸ்ரீதாஸ்), பரிகாரக் கற்பித்தலும் ஆசிரியரும் (க.இராஜமனோகரன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22542).