15277 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொடக்கமும் வரலாறும்.

தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

(8), 9-64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0958-30-6.

மீளுருவாக்க வேண்டிய வரலாறு (முகவுரை), சின்னக் கதை, நாவலருக்கு இடங்கொடுத்த கதை, யார் இந்தச் சிதம்பரப்பிள்ளை, நகராக்கிரம விதாலயம், இப்போதைய அமைவிடமும் பெயரும், இந்துக் கல்லூரியும் சைவ பரிபாலன சபையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் சாதியும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சுருக்கமான வரலாறு ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது ஆசிரியரால் எழுதப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாற்றுக் கட்டுரைகள் இந்நூலில் திரட்டித் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான தில்லைநாதன் கோபிநாத் 2004 முதல் ஆவணவாக்கல் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வரும் ஒரு ஆவணமாக்கற் செயற்பாட்டாளர். தற்போது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

10060 திருப்பத்திற்கான தேடல்கள்: விழிப்புணர்வுக் கட்டுரைகள்.

செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி). xvi, 120 பக்கம், விலை: ரூபா 250.,