15282 முன்பள்ளிக் கல்வி-கட்டுரைகள்.

தேவராசா முகுந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 96 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-67-2.

முன்பள்ளிக் கல்வியின் அவசியம் இன்று உலக நாடுகளில் உணரப்பட்டுள்ளது. முன்பள்ளிக் கல்வியை முறையான ஒரு அமைப்புக்குள் கொண்டு வருவதற்கு கல்வி உளவியலாளர்கள், தத்துவவியலாளர்கள் என்போரின் பங்களிப்புக்கள் அளப்பரியவை. இரண்டரை வயது தொடக்கம் ஐந்து வயது வரையான பருவமே பொதுவாக முன்பள்ளிப் பருவமாகக் கொள்ளப்படுகின்றது. உலக நாடுகள் முன்பள்ளிக் கல்வியின் நோக்கங்களை பல்வேறு விதமாக வரையறுத்துள்ள போதிலும் பிள்ளைகளை ஆரம்பக் கல்விக்கு தயார்ப் படுத்துதலே முன்பள்ளிக் கல்வியின் பிரதான நோக்கமெனக் கொள்ளப்படுகின்றது. முன்பள்ளிகளில் ஆக்கத்திறன், அழகியல், கையாளுந்திறன், மொழித்திறன் விருத்தி, கணிதத்திறன் விருத்தி, சுற்றாடல் தொடர்பான செயற்பாடுகள் போன்ற பாடங்கள் பிரதானமாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்நூலில் முன்பள்ளிக் கல்வி பற்றிய தத்துவவியலாளர்களின் கருத்துக்கள், உலகளாவிய முன்பிள்ளைப் பருவக் கல்வி முறைமைகள், இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறைமை, இலங்கை முன் பிள்ளைப் பருவ விருத்திக்கான தரங்கள், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பாடசாலைகளின் பௌதீக மற்றும் சமூகச் சூழல், முன்பள்ளி ஆசிரியையின் பொறுப்புகளும் கடமைகளும், முன்பள்ளிகளில் ஒன்றிணைந்த கற்பித்தல் அணுகுமுறை, முன்பிள்ளைப் பருவத்தில் கணிதத் திறன்களின் விருத்தி, முன்பள்ளிப் பிள்ளைக்கான விஞ்ஞானம், முன்பள்ளி மாணவர்களின் கற்றலைக் கணிப்பிடல், இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகிய 11 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. 179ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.

ஏனைய பதிவுகள்

Conserve Extremum trois

Satisfait Casino davinci diamonds: Allez Les Pourboire En compagnie de Salle de jeu À l’exclusion de Annales Du 2024 Pourboire De Blason Un bonus De