15289 சைவக் கிரியைகளில் திருமுறை: திருமணம்.

நா.சிவபாதசுந்தரனார் (புனைபெயர்: தொல்புரக்கிழார்). யாழ்ப்பாணம்: நா.சிவபாதசுந்தரனார், தமிழ் நிலை, தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஜ{ன் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணியஅச்சகம்).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.

பொருத்தமான திருமுறைப் பாடல்களின் உதவியுடன் சைவக் கிரியைகளில் திருமணம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையும், எந்தெந்தத் திருமுறைகளில் திருமணம் பற்றிய குறிப்புகள்; வருகின்றன என்பதையும்; சுவையாக விளக்கியிருக்கிறார். திருநீறு அணிதல் (மந்திரமாவது நீறு), பிள்ளையார் பூசை (ஐந்து கரத்தனை), பஞ்ச கவ்விய பூசை (ஆலைப் படுகரும்பின்), சிவ-சக்தி பூசை, நவக்கிரக பூசை,சந்திர-பாலிகை பூசை, காப்புக் கட்டுதல் (மணமகன், மணமகள்), அக்கினி வழிபாடு, முன்னறி தெய்வப் பூசை, மங்கல நாண் பூசை, கன்னிகாதானம், கூறை கொடுத்தல், மங்கல நாண் பூட்டல், பாலும் பழமும் அருந்தல், பசு தரிசனம், அக்கினி வலம் வருதல், வலம் வருதல், வாழ்த்தெடுத்தல், இல்லுறை தெய்வம் வணங்கல் ஆகிய தலைப்புகளில் பொருத்தமான திருமுறைப் பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 9381/9499).

ஏனைய பதிவுகள்

16738 எறிகணை.

தியா (இயற்பெயர்: இராசையா காண்டீபன்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஜீலை 2021.