15290 வளமான வாழ்வுக்கு சுபமான முகூர்த்தங்கள்.

செ.லோகராஜா (புனைபெயர்: கலைமாறன்). மூதூர்: செ.லோகராஜா, முன்னம்போடி வெட்டை, பாலத்தடிச் சேனை, தோப்பூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (திருக்கோணமலை: அஸ்ரா கிராப்பிக்ஸ்).

xxiii, (3), 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-43127-2-2.

இந்நூலாசிரியர் பாடசாலை ஆசிரியர், அதிபர், கல்விப் பணிப்பாளர் எனக் கல்விச் சேவையினை மேற்கொண்டு இன்று அச்சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். சிறப்பாக சோதிடக் கலையில் ஈடுபாடு கொண்டுள்ள அவர் சோதிடத்திலும், வாஸ்துக் கலையிலும் வல்லவர். ‘சோதிடக் கலைமாமணி” என்ற பட்டத்தினையும் பெற்றிருப்பவர். இந்நூலில் நம் மூதாதையர் நமக்கு விட்டுச் சென்ற முதுசொங்களான பண்பாட்டு அம்சங்களை வருங்காலச் சந்ததியினர் மறந்து விடாது கடைப்பிடிப்பதற்காக அவற்றைத் தேடித் தொகுத்து நூலாக்கித் தந்துள்ளார். சுபமுகூர்த்தங்கள் பற்றிய கண்ணோட்டம், ஜன்மத்திரயங்களிற் செய்யத் தக்கவை, ஜன்மத்திரயங்களிற் செய்யத் தகாதவை, முகூர்த்தத்திற்கு ஆகாத நட்சத்திரங்கள், உபநயனம் (பூணூல் அணிதல்), சீமந்தமும் பும்ஸவனமும், நாமகரணம், மயிர் கழித்தல், காது குத்துதல், அன்னப்பிராசனம், வித்தியாரம்பம், ஆடை ஆபரணம் வாங்குதல் அணிதல், பிரயாணம் செய்தல், வாகனங்கள் வாங்கவும் விற்கவும், நோயாளிக்கு மருந்து கொடுக்க, உழவுத் தொழில் (ஏர் மங்கலம்), உரமிடுதல் (பசளை இடுதல்), விதை விதைக்க-நாற்று நடுவதற்கு, அறுவடை செய்வதற்கு, தானியம் சேமித்தல், கிணறு-குளம்-ஏரி ஆகியவை வெட்டுவதற்கு, தாலிக்குப் பொன்னுருக்கல், விவாகம் செய்தல், கிருகாரம்பம் (வீடு கட்டுதல்), கிருகப் பிரவேசம் (வீடு குடிபுகல்), வியாபாரம் செய்தல், புதுக் கணக்குப் பதிதல், புதிதெடுத்தல், தானியம் கொண்டுவருதல், விவாகக் கிரகப் பிரவேசம், சாந்தி முகூர்த்தம், பிற்சேர்க்கை என முப்பது இயல்களில் இந்நூலை எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

15933 அறிவொளி மாவை த.சண்முகசுந்தரம் (தசம்) சிந்தனைகளும் எழுத்துப் பணிகளும்.

கனகசபாபதி நாகேஸ்வரன். பெலிகுல்லோயா: கனகசபாபதி நாகேஸ்வரன், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). ix, (3), 395 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,