15291 ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல்.

சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 170 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-679-3.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப்  பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் ஈழத்துத் தமிழர்களின் நாட்டார் வழக்காற்றியலைப் பொதுநிலையில் அறிமுகம்  செய்யும் ஒரு நூலாக இந்நூல் அமைகின்றது. இந்நூல் ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியலின் வளர்ச்சி, ஈழத்துத் தமிழ் நாட்டார் இலக்கியங்கள் (நாட்டார் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள், வாய்மொழிக்கதைகள்), நாட்டார் கலைகள், நாட்டார் சடங்குகள், நாட்டார் அறிவியல், கள ஆய்வு, சமூக மாற்றமும் ஈழத்துத் தமிழ் நாட்டாரியலும் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. சின்னத்தம்பி சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

16254 இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டுவிழா மலர் (1897-2022).

சண்.பாரதிநாதன் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: பழைய மாணவர் சங்கம், இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2022. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ், திருஞானசம்பந்தர் வீதி). xxxii, 316 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,