14989 புதுவையாள்: பிரதேச பண்பாட்டு விழா மலர்: 2016.

வீ.பிரதீபன், இ.செல்வநாயகம் (மலராசிரியர்கள்). முல்லைத்தீவு: பிரதேச பண்பாட்டுப் பேரவை, பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. ((வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், குடியிருப்பு). viii, 197 பக்கம், புகைப்படங்கள், வண்ணத்தகடுகள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள இச்சிறப்புமலரில், வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், அடங்காப்பற்று வன்னிப் பிரதேசத்தில் சிவலிங்க வழிபாடு (அருணா செல்லத்துரை), கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய வன்னி நாடும் தொல்லியற் சான்றுகளும் (சி.க.சிற்றம்பலம்), தமிழ்-தமிழர்-தமிழகம்- தமிழ்நாடு: ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (தனபாக்கியம் குணபாலசிங்கம்), வன்னிப்பிரதேச வயற்பண்பாடு (அகளங்கன்), வன்னிப்பிரதேசக் கவிஞர்கள்: ஒரு தொகுதி நிலை வரலாற்று ஆய்வு (சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்), வட இலங்கை மகிடிக் கூத்து- ஓர் ஆய்வு (காரை.செ.சுந்தரம்பிள்ளை), முல்லை மாவட்ட நாட்டார் இலக்கியம் (முல்லைமணி), முல்லைத்தீவு மாவட்ட மீன் வளமும் மீன்பிடி முறைகளும் (க.ஆ.ஞானேஸ்வரன்), முல்லை மாவட்டத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் (ந.இராமநாதன்), முல்லைத்தீவின் தென்கிழக்கு எல்லையில் நிலைபெற்றிருந்த பதுவில் இராசதானி (செ.சஞ்சீவன்), முல்லைத்தீவு வலயக் கல்வி வளர்ச்சி (செ.பஞ்சலிங்கம்), சாகித்தியரத்னா கலாநிதி முல்லைமணியின் மழைக்கோலம் சமூக நாவலின் சமகாலத் தாக்கம் (ந.பார்த்திபன்), பிரதேச செயலகங்களில் அரும்பொருட்காட்சியகங்களின் அவசியம் (ஜெயம் ஜெகன்), புதுக்குடியிருப்பில் சரவணபவன் என்ற ஒரு ஆளுமை (வீ.பிரதீபன்), வள்ளுவர்புரம் (கவிதை-யோ.புரட்சி), புதுக்குடியிருப்பில் ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய வரலாற்றுப் பின்னணி (இ.செல்வநாயகம்), இந்து ஆலயங்களும் அவற்றின் இன்றைய நிர்வாக முறைகளும்-ஒரு நோக்கு (தமிழ் வாரிதி), முல்லை மாவட்டத்தில் வழங்கும் சிந்து வகைப் பாடல்களின் தொகுப்பு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்