15304 தேவசகாயம்பிள்ளை (நாட்டுக்கூத்து).

புலவர் ஸ்ரீ முத்துக்குமாரு (மூலம்), மு.வி.ஆசீர்வாதம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மு.வி.ஆசீர்வாதம், ஆசீர் அகம், 29, கண்டி வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1974, 1வது பதிப்பு, 1926. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).

xxiv, 140 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21×14 சமீ.

இற்றைக்கு பல வருடங்களின் முன் அராலியூர் ஸ்ரீ முத்துக்குமாருப் புலவர் அவர்களால் 1827இல் இயற்றப்பெற்று நாளடைவில் பிறரது பாக்களும் சேர்க்கப்பெற்று, கரலிகித வழுவுற எழுதப்பட்டிருந்த பல ஏட்டுப் பிரதிகளை ஆராய்ந்து கூடியவரையில் திருத்தியும் சில புதிய பாக்களைச் சேர்த்தும் அச்சுவேலி ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1926ஆம் ஆண்டு அச்சேற்றப்பட்டது. 1926ஆம் ஆண்டு பதிக்கப்பெற்ற இந்த நாட்டுக்கூத்து நூல் கிட்டத்தட்ட 50 வருடங்களாகியும் மறுபதிப்புச் செய்யப் படாமையினால், நூற்றுக்கணக்கான நாட்டுக்கூத்துப் பிரியர்களின் சார்பில் நாட்டுக்கூத்துக் கலாநிதி ம.யோசேப்பு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. மு.வி.ஆசிர்வாதம் அவர்களால் தனது அச்சகத்தில் மறுபதிப்புச் செய்யப்பட்டது. இந்நாடக கர்த்தாவான தேவசகாயம்பிள்ளை தான் ஞானஸ்நானம் பெற்று ஏழாம் வருடத்தில் கால் விலங்கு பூண்டு, தனது நாற்பதாவது வயதில் 14.01.1752இல் திருவாங்கூர் மகாராசாவினால் கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் பின்னாளில் தோண்டியெடுக்கப்பட்டு கோட்டாற்றில்  அப்போஸ்தலர்  சென்; பிரான்சீஸ்க்கு சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தேவசகாயம்பிள்ளை அவர்களது வரலாறே நாட்டுக் கூத்தாகப் பாடிவைக்கப்பட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

Internet casino With 5 Minimum Put

Content 5 Lowest Put Casinos Within the Canada 3: Come across Generous Local casino Bonuses And you may Advertisements Inquire Reels Slot Most other Lower