15307 மனம்போல் மாங்கல்யம்(நாட்டுக்கூத்து).

மு.வி.ஆசீர்வாதம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நாட்டுக் கூத்துக் கலாநிதி ம.யோசேப்பு, 54, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).

(38), 142 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 22×14.5 சமீ.

ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகளில் ஒன்றான “நீ விரும்பிய படி” (As You like it) என்னும் கதை மனம்போல் மாங்கல்யம் என்னும் பெயரில் நாட்டுக்கூத்தாகப் பாடப்பெற்றுள்ளது. பிரான்சு நாட்டு முன்னாள் அரசன் பேடினன், பேடினனின் தம்பியும் புதிய மன்னனுமான பிரடெறிக், பேடினனின் மகள் றோசலின், பிரடெறிக்கின் மகளான சீலியா, பெடினன் பேரவைப் பிரபுவான றோலன், றோலன் பிரபுவின் (Sir Roland de Bois) மூத்த மகன் ஒலிவர், றோலன் பிரபுவின் இளைய மகன் ஒலாண்டோ, றோலன் பிரபுவின் பணியாள் அடம், உலகம் சுற்றி மற்போர் புரியும் மல்யுத்த வீரன், நடன மங்கை டெய்சி, அரசன் பேடினனின் பேரவைப் பிரபுக்கள், பிரடெரிக் மன்னனின் மந்திரி, தளபதி, ஒலிவரின் பணியாள் உள்ளிட்ட 23 பாத்திரங்களுடன் இந்நாடகம் மேடையேற்றத்திற்கேற்றவாறு எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17825).

ஏனைய பதிவுகள்

Nokia Mobile phones

Articles Cellular Casino Live: Observe Fox10 Development Enjoy Super Moolah On the web Noxwin Bonus Rules Uncover what Sort of Game Noxwin Local casino Gives